"என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு விழா ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெற்றது.
எழுத்தாளர் செயப்பிரகாசம், திரு.நெடுமாறன், திரு.தமிழருவி மணியன், இயக்குனர் திரு.மணிவண்ணன் , நடிகர்திரு. நாசர், நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன். சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் திரு.வேல் முருகன்,பேராசிரியை. செல்வி, திரு.நிமல்கா பெர்ணான்டோ, மற்றும் பலர் கலந்துகொண்டனர் .
இவ்விழாவில் பேசிய அனைத்து தலைவர்களும், ஈழ போரில் தமிழக திமுக ஆட்சி மற்றும் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் துரோகம் மற்றும் சிங்கள படையின் வெறித்தனம் பற்றி எடுத்துரைத்தனர்.
அவற்றின் காணொளி இங்கே காண கிடைக்கிறது
http://www.youtube.com/user/pandri5000.
இவ்விழாவில் தமிழருவி மணியனின் பேச்சு மிக சுவாரசியமானது.
நாம் தமிழர் இயக்கம் இப்போது இலக்கை தீர்மானித்து விட்டது போலவே தெரிகிறது.
தமிழருவி மணியனின் பேச்சு அதை சரியாகவே பிரதிபலிக்கிறது.
தெள்ள தெளிவாக சொன்ன விஷயம்:
தமிழகத்தின் அடுத்த ஆட்சியில் யார் வர வேண்டும் என்பது முக்கியம் அல்ல. யார் வர கூடாது என்பது தான்.
இலக்கு: திமுக, கருணாநிதி, காங்கிரஸ், சோனியா.
இதற்காக அவர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமைக்கு ஒரு நியாயமான கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
சில பல சீட்டுகளுக்காக திமுகவுடன் கூட்டு வைக்காதீர்கள் என்று.
அந்த காணொளி:
எப்போதும் உண்மை சுடும்.
அது போல மணியன் எடுத்துரைத்த சில உண்மைகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் சுடுமா என்று பார்க்க வேண்டும்.
எதிர்பார்ப்புடன்
லகுட பாண்டி