வியாழன், 30 டிசம்பர், 2010

சிறுத்தை, விக்ரமற்குடு, கமல், கருந்தேள், " நீஈஈஈஈஇ யப்பாஆஆஆஆ "

சமீபத்தில் (டிசம்பர் 2010 ல் தாங்க), தேளின் மன்மதன் அம்பு பற்றிய விமர்சனத்தையும், அதில் இருக்கும் கமல் பற்றிய கருத்துகளை பற்றியும் தான் இந்த பதிவு.


முதலில் சிறுத்தை ட்ரைலர்



அடுத்து விக்ரமற்குடு ட்ரைலர்



இதில் ரவிதேஜா போட்டிருக்கும் காக்கி சீருடைக்கும், கார்த்தி போட்டிருக்கும் காக்கி சீருடைக்கும் வித்தியாசம் உள்ளது, எனவே கதை என்னுடையது என்று "சிறுத்தை"யின் இயக்குனர் சிவா காப்பி ரைட்ஸ் வாங்காமல் சொல்லமுடியுமா?

அப்படி சொன்னால் விக்ரமற்குடுவின் கிளைமாக்சில்  " நீஈஈஈஈஇ யப்பாஆஆஆஆ " என்று சொல்லிகொண்டே ஒரு பெண் எட்டி உதைப்பதை போல விக்ரமற்குடுவின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி எட்டி உதைப்பார்.
அந்த மாதிரி எட்டி உதைக்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் தான் கமல்,மணிரத்னம், மிஷ்கின், அமீர் இத்யாதிகள் திருடுகிறார்களா?

இதில் கமலுக்கு நல்ரசனை பற்றிய வியாக்கியானம் வேறு.

கொஞ்சமும் கூச்சமில்லாமல் திருடும் இவர்களை என்ன சொல்வது?

நல்ரசனை:

"மக்களோட மனசுல" என்று ஆரம்பிக்கும் அந்த வசனம் ரொம்ப அருமை.

இப்போ நம்மளோட ரீமேக்:

" நூறு பேர் நம்ம பிளாக்கை படிக்கனும்னா, நூறு பதிவு போடணும்னு அவசியம் இல்லை"





"ஒரு பதிவு போட்டா போதும்"






"அந்த பேர்"






"அந்த மொக்கை"






"பாண்டி.......லகுட பாண்டி"



"அது போதும்"



டிஸ்கி:

தேளின் பெயரை இந்த பதிவின் தலைப்பில் போட்டதால் அவருக்கும் தனியாக இப்பதிவு மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது.

தேள், உங்களுக்கு விருப்பமில்லாவிடின் உடனடியாக நீக்கப்படும்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

வலி

மூளையில் உரைத்த போது,


சுருக்கென்று தைத்தது அந்த வலி.

"அவருக்கா"
 
 அவர் " அழகுராஜ் "


அவனுக்கு அவரை அதிகம் பிடிப்பதில்லை.

ஆனாலும் மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.

அவர் ஒன்னும் அப்படி ஒரு பெரிய எதிரி அல்ல.

உண்மையை சொல்வதானால் அவர் தான் அவனுக்கு ஆதர்சனம்.

பல விஷயங்களில். குறிப்பாய் தொழிலில்.

ஒரு அரசாங்க அதிகாரியாய் இருந்தும் அவர் மேஜையில், கிடப்பில் கோப்புகளை பார்த்ததாய் நினைவில் இல்லை. தன்னை தேடி வரும் எவரிடமும் அவர் "இல்லை" என்று சொன்னதே இல்லை.

எப்பொழுதும் அவரை சுற்றி ஒரு கும்பல் இருக்கும். இப்பொழுதும் இருக்க தான் செய்கிறது.

அவரை போலவே எல்லா விஷயங்களிலும் இருக்க முற்பட்டான் புகை பிடித்தலையும் சேர்த்து

பதின்ம வயதுகளில் முதலாவதாக தான் மனைவியாரின் மகன் அல்ல துணைவியாரின் மகன் என்று தெரிந்த போது மெல்ல அவரிடம் இருந்து விலகினான்.

அவர் மேல் மெல்ல ஒரு இனம் தெரியாத விரோதம் அவனுக்குள் வளர ஆரம்பித்தது. .

அவர் செய்த அதே தவறை, புகை பிடித்ததை அவர் கண்டித்த போது அவரை பார்த்து " நீ யோக்கியமா? " என்று உதடுகள் கேட்க துடித்து மௌனமானான்.

தன முதல் உத்தியோக்மாய் பம்பாய் போன போது

" நமசிவாயம் சொல்றத கேட்டு செய்." என்று தன் அண்ணனின் சொல்படி நடக்க சொன்ன போது வெறுப்பு கூடியது.

நமசிவாயம் - மனைவியாரின் மகன். சிறய அளவு வேற்றுமைகளும், மனஸ்தாபங்களும் அவர்களுக்குள் இருந்த சமயம். பம்பாய் அதை எல்லாம் சுத்தமாக துடைத்தெறிந்தது.

ஒற்றுமையான சகோதர்கள் ஆனார்கள். ஆயினும் அவரின் மீதிருந்த வெறுப்பு மட்டும் சற்றும் குறையவில்லை.

வீடு திரும்பி சொந்த தொழில் தொடங்கிய போது " என்னமோ செய் " என்று சொன்னார். வெறுப்பு விரோதம் ஆனது. அதே தொழில் ஊத்தி மூடி கொண்ட போது அவரின் மீது காட்டமான கோபம் இருந்தது.

பிழைப்புக்காக சிங்கை.


அன்று வார விடுமுறையின் சோம்பல் காலை தூக்கத்தில் அலைபேசி கதறியது.

மலேசியாவிலிருந்து நமசிவாயம் லைனில் பதறினான்.
முடிக்கமுடியாமல் தேம்பினான்.

" டேய் அப்பாவுக்கு ஹார்ட் அட்டகாம்" என்று.

மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.

 
" அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் "

 
இது ஒரு புனைவு அப்படின்னு ஓவரா பில்டப் எல்லாம் இல்லை.
 
திடீர்னு ஒரு கதை எழுதலாம்னு தோனுச்சு.


அதான்.

நட்புடன்


லகுட பாண்டி

திங்கள், 13 டிசம்பர், 2010

ஸ்பெக்ட்ரம், வீட்டு வசதி வாரியத்தின் ஒதுக்கீடு........இன்னும் என்ன என்ன?????

ரெண்டு மாசம் ஊருக்கு விடுமுறையில போய் நிம்மதியா இருக்கலாம்னு போனேன்.

போன எடத்துல ஒரே மழை.

கடலூர் நெஜமாவே கடல் ஊரா மாறி இருந்தது.

கடத்தெருனு ஒரு சொல்லாடல் உண்டு எங்க ஊர்ல....

மார்க்கெட்...சந்தை...முக்கியமான வியாபார தெருவை தான் நாங்க கடத்தெருனு சொல்வோம்.

இந்த முறை போனப்ப கடைத்தெரு கடல் தெருவா மாறி இருந்தது.

திரும்பிய இடமெல்லாம் நீர்.

அளவுக்கு மிஞ்சிய அமிர்தமாய்..........

ரசிக்க முடியாத அளவில்...............

அதை விட கொடுமை.............

உள்ளூர் நகராட்சி பற்றி நாளேடுகளில் கிழித்து எரிந்தும் சற்றும் அலட்டி கொள்ளாத அதன் உறுப்பினர்கள், ஊழியர்கள்.........

சரி அவர்கள் இருக்கும் ஏரியா நல்லா இருக்கானு பாத்தா அதுவும் இல்ல.

ஒரு நாளைக்கு கொறஞ்சபட்சம் ஒரு ஆக்சிடென்ட், இந்த பாதாள சாக்கடை திட்டத்தால.............

டிவியா போட்டா ஸ்பெக்ட்ட்ரம் ........

வீடு ஒதுக்கிய பிரச்சினை.............

நிரா ராடியா........கனிமொழி...........ராசா............ராஜாத்தி அம்மா.............டாட்டா.........தாத்தா(கலைஞர்).....................

உருப்புடுவாங்க? இந்த நல்லவங்க எல்லாம்..................

இவங்க, தான் அழியறதோட மக்களையும் சேத்து அழிச்சிட்டாங்க....

மக்களுக்கு அந்த மழை நீர், சரியில்லாத ரோடு பத்தி எல்லாம் பெரிய கவலை இல்லாத மாதிரி தான் தெரிது..............

வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவ ரெடியா இருக்காங்க போல.

நெஞ்சு எரிஞ்சுது.  மொத ஒரு வாரம்.

அதுக்கப்புறம்.......

நானும் அமைதியா இதுவும் கடந்து போகும்னு சொல்லிட்டு எம் மக்களை போலவே
" வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவ " ரெடிஆயிட்டேன்.

பதினோரு மணிக்கு டாஸ்மாக்கில் கள்ள சரக்கு வாங்கி குடிச்சிட்டு மீதி நாட்களை கடந்து வெற்றிகரமாக விடுமுறை கழித்து வாகையுடன் திரும்பி விட்டேன்.........

ஊரில் நல்ல ரோடு போட முடியாத குறையை கத்தாரில் போக்கி கொண்டிருக்கிறேன்.


அனுபவமா........சிறுகதையா............வயித்தெரிச்சலா............எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்..........

வேதனையுடன்


----லகுட பாண்டி.

புதன், 29 செப்டம்பர், 2010

தினசரி 400 ஏழைகளுக்கு 3 வேளை உணவளிக்கும் நாராயணன் கிருஷ்ணன் - நம்மில் ஒரு சாதனை நாயகன்

நம்மில் ஒரு சாதனை நாயகன்


ஏழைகள் பசியால் அவதிப்படுவதை பார்த்து வருத்தமடைந்த மதுரையைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன்என்ற மனிதர்தினமும் 400 பேருக்கு 3 வேளை உணவளித்து வருகிறார்.
இதனால்உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் சிறந்த மனிதர்களுக்கான விருது போட்டிக்குஇவரை தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி.
பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார் வள்ளலார்அதேபோலநாராயணனும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு வருகிறார்இந்த காலத்திலும் வீதியில்அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர்வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?.
இந்த மனிதர் மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன்நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்தில் செஃப்ஆக வேலை பார்த்து வந்தவர் நாராயணன்ஆனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டு வீதியில் ஆனாதையாய்திரியும் ஏழைகளைப் பார்த்து அதிர்ந்து பெரும் பணத்தைத் தரும் அந்த வேலையை விட்டு விட்டு தினமும்தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார்தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளைஉணவு அளித்து வருகிறார்
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்திற்கு செஃப் வேலைக்கான வாய்ப்புநாராயணனுக்கு வந்தது 2002ம் ஆண்டில்இதற்கான நேர்முகத் தேர்வுக்காக சுவிஸ் சென்றார்பின்னர் அதைமுடித்துக் கொண்டு வெற்றிகரமாக மதுரை திரும்பினார்.
வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை ஒரு விநாடி நிறுத்திப் போட்டதுசிக்குப்பிடித்த தலை முடியுடன்உடலில் ஒட்டிக் கிடந்த துணியுடன்நகரக் கூட முடியாத நிலையில்சாப்பிடவழியில்லாமல் தனது மலத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பாவப்பட்ட முதியவர்.
இந்தக் காட்சி அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டதுஇதுகுறித்து அவர் கூறுகையில்அந்தக் காட்சியைப்பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன்எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமானநிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன்.இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன்.
முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன்அவருக்கு நல்ல உடை கொடுத்து,தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன்அன்று தொடங்கியது எனது இந்த பணி.
பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத்தொடங்கினேன்அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன்.அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்துஇயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன் என்றார் நாராயணன்.
நாராயணனும்அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர்தனதுகையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீஅளவுக்கு சுற்றி வந்து ஏழைஎளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை நாராயணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.
இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலைசாப்பாடு கொடுக்கிறார்அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில்(மன வளம் குன்றியவர்கள்இருந்தால்பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டிவிடுகின்றனர்குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டுநகர்கின்றனர்.
அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடிகாடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால்அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார்அவர்களுக்கு தானே உட்கார்ந்துஅழகாக முடி வெட்டிதாடியை ஒட்ட வழித்தெடுத்துமுகத்தை சீராக்குகிறார் நாராயணன்.
பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்புபோட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார்அப்போதுதங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்துநாராயணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.
இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாடுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம்நாராயணன்.
நாராயணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான்.தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால்பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் நாராயணன்நான் சமைப்பதை விட அதைசாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது.அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன்எனது மக்களைபட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க.
உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின்மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறதுசிஎன்என் தொலைக்காட்சிஇந்த வருடம் சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும்ஒருவர்.
இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும்ஆனால் இந்த விருதின் மூலம் அவர்பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக வாய்ப்புள்ளதுநீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்கஅளிக்க இங்கு சென்று வாக்களிக்கலாம்.

http://heroes.cnn.com/vote.aspx
நாராயணன் கிருஷ்ணனின் அட்சயா டிரஸ்ட்டின் இணையதளம்நாராயணனின் சேவையில் பங்கெடுக்கவிரும்புவோர் இதை அணுகலாம்...

http://www.akshayatrust.org/



என்னை பொறுத்த வரை இவரை சி.என்.என். தொலைகாட்சி ஹீரோவாக தெரிவு செய்யாவிட்டாலும் இவர் "நம்மில் ஒரு சாதனை நாயகன்" தான்.

நட்புடன்

லகுடபாண்டி

   

புதன், 8 செப்டம்பர், 2010

முரளி - மாண்புமிகு மாணவன்

ஒரு நாளில் செய்தி தாளில் எத்தனையோ இறப்புகளை படிக்க நேரிடுகிறது?

படிக்கும் பொழுது கலவையான உணர்ச்சிகள் எழும்.

சந்தோசம், சலிப்பு, பயம், பரிதாபம்............................சில இறப்புகளில் உண்மையான வருத்தம் மேலிடும்.

எனக்கு அப்படி ஏற்பட்ட ஒரு உண்மையான வருத்தம் தான் முரளியின் இந்த மறைவு.

Simply he is an harmless actor.


இயக்குனர் சொல்வதை கேட்டு அதை அப்படியே நடிக்கும் நடிகர்.

புரட்சி நாயகன் என்று பட்டம் இவருக்கு மிக பொருத்தமான பட்டம் தான் என்பதற்கு இவர் நடித்த கீழ் கண்ட படங்களே சாட்சி:


பகல் நிலவு



பாலம்


புதிய காற்று


அதர்மம்


சத்யவான்




தேசிய கீதம்




இரணியன்


வெற்றி ‌கொடி கட்டு


பொற்காலம்





அள்ளித்தந்த வானம்


கடல் பூக்கள் 





பெரும்பாலான மக்களுக்கு முரளி என்றால் நினைவுக்கு வருவது அவர் கல்லூரி மாணவனாக நடித்த பாத்திரங்கள் மட்டுமே.



சில பேருக்கு அவர் மேடை பாடகராக தோன்றி நடித்த படங்கள். மோகனுக்கு பிறகு மைக் முரளி என்று செல்லமாக அழைக்க படும் அளவுக்கு மைக்கோடு படங்களில் தோன்றி நடித்தார்.

ஆனால் மேலே குறிப்பிட்ட படங்களில் முரளியின் நடிப்பு வேறு பரிமாணகளில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

ஆக்ரோஷமான நாயகனாக நடிப்பதற்கு முரளி மிக பொருத்தமானவர் என்பது என் திடமான எண்ணம்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் முரளியை மேலே குறிப்பிட்ட படங்களில் தான் மக்களுக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும்.

அனாவசிய கிசுகிசுக்கள் இல்லாமல், அமைதியாக பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.

கல்லூரி மாணவனாக 47  வயது வரை நடித்தவர். தன் மகனுடன் கல்லூரி மாணவனாக நடித்த ஒரே நடிகராகவும் இருக்க கூடும்.



அவ்வாறு நடித்தாலும், அதை தன் நடிப்பாற்றலால் மக்களை ஏற்க வைத்தவர்.





மிக நல்ல அந்த கலைஞனின் ஆத்மா அமைதி கொள்ள வேண்டுவோம்.

டிஸ்கி:



பல பதிவர்களாலும், பத்திரிகைகளாலும் கிண்டல் செய்யப்பட்ட கடவுள் முரளி என்று ஒவ்வொரு தீபாவளிக்கும் போஸ்டர் அடிக்கும் இந்த ரசிகர் திரு. கே.கே. பெருமாள், ஏனோ நினைவுக்கு வந்து சென்றார்.


வருத்தத்துடன் 

லகுட பாண்டி

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தமிழ் மண்ணில் பெருகும் மலையாளிகளின் ஆதிக்கம் - கா. தமிழ்வேங்கை

சமீபத்தில் எனக்கு மின்னஞ்சலில் வந்த கட்டுரை.

போர் இல்லாமல் வளைகுடாவை பிடித்த மலையாளிகள்....மெல்ல தமிழகத்தை நோக்கி தங்கள் பார்வையை அழுத்தமாக பதித்திருப்பது இந்த கட்டுரையில் புலப்படும்.


இன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில் தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது.
மணல் கொள்ளை - முல்லைப் பெரியாறு :
முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தொடர்ந்து நமக்கு தொல்லை கள் கொடுத்து வரும் மலையாளிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்கா மல் புதிய அணைகட்ட தீர்மானித் துள்ளனர். புதிய அணை கட்டப்படு மானால் முல்லைப் பெரியாறு அணை யில் தமிழகத்திற்குள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். இந்த உண்மை கேரள அரசுக்கும், தமிழக அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், மன்மோகன் சிங் - சோனியாவிற்கும் நன்றாகத் தெரியும். ஆனால் பாதிப்பைக் கண்டு பதை பதைக்க வேண்டிய முதல்வர் கருணா நிதி கடிதம் எழுதிக் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார். புதிய அணை கட்ட தமிழக ஆறுகளிலிருந்து நாற்பதாயிரத்தி லிருந்து அறுபதாயிரம் யூனிட் அளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டு கேரள வனப்பகுதியில் குவிக்கப்பட்டு வரு கின்றது. (ஒரு லாரியில் ஒன்றரை யூனிட் மணல் நிரப்பலாம்).

நிலம் கைப்பற்றுதல்
தமிழக - கேரள எல்லை மாவட் டங்களான நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி என ஏழு மாவட்டங்களின் எல்லைப் பகுதியிலிருந்து தமிழகத்தினுள் நூறு கி.மீ. அளவிற்கு உள்ளே நுழைந்து நிலங்களை வாங்கியுள்ளனர் மலையாளி கள். வளைகுடா நாடுகளில் பெரும்பணம் சம்பாதிக்கும் மலையாளிகள் முதலீடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் நிலங் களை வளைத்துப்போட்டு வருகிறார்கள். தமிழ்நாடடுத் தமிழர்களைவிட அதிக விலைகொடுத்து மலையாளிகள் நிலங்களை வாங்குவதால் தமிழர்கள் மலையாளிகளிடம் நிலத்தை விற்றுவிட்டு வெளியேறுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் இன்று 8ல் 1 பகுதி மலையாளிகளின் கையில் உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எல்லையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இடத்தை வளைத்துப் போடுவதில் குறியாக இருக்கின்றனர். நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் உள்ள தமிழக வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டி கப்பல் மூலம் ஜப்பான், கொரியா போன்ற நாடு களுக்குக் கடத்தும் தொழிலையும் பகிரங்கமாகச் செய்து வருகிறார்கள்.

நகை வணிகம் :
ஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மார்வாடிகள் நகை வணிகம், வட்டிக் கடை நடத்தி வந்தா லும் ஒரே பெயரில் தமிழ்நாடு முழுவதும் கடைகள் திறந்து கிளை பரப்பவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நகை வணிகத் தில் நுழைந்த மலையாளிகள் இன்று ஜோஸ் ஆலுகாஸ், ஜெய் ஆலுகாஸ், மணப்புரம் கோல்டு ஹவுஸ் என நூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பி விட்டார்கள். இந்த நகைக்கடைகளில் கண்ணாடிக் கதவைத் திறந்து விடுப வன் தொடங்கி கல்லாப்பெட்டியில் இருப்பவன் வரை மலையாளிகளே.
நகைக்கடை என்றால் 10 ஷ் 15 அளவில் கடைகள் என்று நினைத்து விட வேண்டாம். ஐந்தடுக்கு மாடிகள், நூற்றுக்கணக்கான மலையாள ஊழியர் கள், குளிரூட்டப்பட்ட அறைகள் என விரிந்து கிடக்கின்றன. மார்வாடிகளால் தமிழர்களின் நகைத்தொழில் நசிந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோக வரலாற்று நிகழ்வின் வலி ஆறும் முன்பே மலையாளிகளின் ஆதிக்கத்தால் தமிழக நகை வணிகர் களும் தொழிலாளர்களும் நடுத்தெரு விற்கு வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் வேதனை யும் வேடிக்கையும் என்னவென்றால் அண்மையில் ஜோஸ் ஆலுக்காசின் கிளைத் திறப்புவிழா கடலூரில் நடந்தது. கடையைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். மலை யாளிகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இரகசியம் தெரிகிறதா?

முத்தூட் பைனான்ஸ்:
மலையாளிகளால் சில ஆண்டு களுக்கு முன் சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் மட்டும் முத்தூட் பைனான்ஸ் தொடங்கப் பட்டது. பிறகு குறைவான வட்டி, நகைக் கிராமிற்கு அதிக பணம் நாள் கணக்கில் மட்டுமே கணக்கிடப்படும் வட்டித்தொகையென தமிழக மக்களி டம் கவர்ச்சி காட்டி நகராட்சி தகுதியுள்ள தமிழக நகரங்களில் தமது வட்டிக்கடையை விரிவாக்கம் செய்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தினர் இன்று ஐந்தாயிரம், பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட சிற்றூர்ப் பகுதிகளில் கூட தனது கிளையைத் தொடங்கி வட் டிக்கடை என்ற பெயரில் தமிழர்களின் சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்தூட் பைனான்ஸ் கிளைகள் தமிழகத்தில் வேர்ப்பிடித்து வளர்ந்து வரும் பேரா பத்து புரியாமல் மலையாளிகளிடம் நகைகளை அடகு வைத்து மனை வாங்கும் தமிழர்கள் பின் வீட்டை விற்று வட்டி கட்டி நடுத்தெருவிற்கு வருகிறார்கள்.

கட்டுமானத் தொழிலிலும் கைவரிசை:
அரை கிரவுண்ட், ஒரு கிர வுண்ட் அளவில் வீடு கட்டிக் கொடுப் பதை நாம் பெருமையாக பீற்றிக் கொள்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் மதிப்பிடக்கூடிய கட்டிடங்களைக் கட்டும் தொழில் மலையாளிகளின் கையில். தமிழகக் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஏக்கர் கணக்கிலான பெரிய பெரிய பங்களாக்கள், மாளிகைகளை தமிழ்நாட்டில் எழுப்பிக் கொண்டிருக்கும் பென்னிகுரியகோஸ் என்ற மலையாளியின் கையில்தான் இன்று கட்டுமானத்துறை உள்ளது. தமிழகத்திலுள்ள பாரம்பரியமான செட்டி நாட்டு வீடுகளை எல்லாம் வாஸ்து சரியல்ல என்று இடித்து, அதில் உள்ள பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தமிழகக் கட்டிடக் கலைகளைச் சிதைத்து மலையாள கட்டிடக் கலைகளைப் புகுத்திக் கொண்டிருக்கிறார் பென்னி குரியகோஸ். இவரது ஆண்டு வருமானம் 500 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதே போல ஆண்டுக்கு பலநூறு கோடிகளை இலாபமாக ஈட்டும் எம்.ஆர்.எப். டயர் நிறுவனமும் மலையாளிகளுடையதுதான்.

பண்பாட்டுப் படையெடுப்பு :
தமிழகத்தில் மார்வாடிகளின் ஹோலிப் பண்டிகையைவிட இன்று பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது மலையாளிகளின் பண்டிகையான ஓணம். தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை விட்டு அண்டை மாநிலத்துடன் நட்பை வளர்ப்பதுபோல் கேரளத்துடனும் நட்போடு இருக்க வேண்டாமா? இதற்காக தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் திருவிழாவிற்காக மதுரை, நெல்லை, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நாகர்கோவில், குமரி என பதினைந்திற்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்தார். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மலையாளிகள் தமிழக பள்ளி - கல்லூரிகளில் மலை யாளப் பண்பாட்டின் பெருமைகளையும், உள்ளூர் தொலைக்காட்சிகளை ஒரு நாள் குத்தகைக்கு எடுத்து ஓணம் பண்டிகை யின் சிறப்பையும் பரப்புகிறார்கள். இதேபோல கதகளிக்கும் தமிழகத்தில் அண்மைக் காலமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. விளம்பரப் படங்களில்கூட கதகளி இடம் பெறும் அளவிற்கு இன்று நம்மிடையே மலை யாளப் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்து வருகின்றது.

செண்டா மேளம் :
மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து மாண்ட நாளில் மதுரையில் மு.க. அழகிரி தனது பிறந்த நாளை கிடாவும், கேக்கும் வெட்டிக் கொண்டாடினார் என்பது தெரிந்த கதைதான். மேலும் அன்றைய சிறப்பாக கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் போட்டு ஆனந்தத்தில் மூழ்கித் திளைத்தார்கள். கேரளத்தில் மட்டுமே பிரபலமடைந்திருந்த செண்டா மேளத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியது மு.க. அழகிரி தான். இன்று மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் இல்ல விழாக்களில் செண்டா மேளக் குழுவினர் தவறாமல் இடம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு மு.க. அழகிரியே முழுமுதல் காரணமாவார். அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் கன்னிபூசை நடத்தும் போதுகூட இன்று செண்டா மேளம் இடம் பிடித்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்று வருகின்றது. மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில் கூட செண்டா மேள இசை நிகழ்ச்சி நடைபெறுவதுதான் பெறும் வேதனை.
இதன் உச்சக் சட்டமாக அண்மை யில் கோவையில் கூடிக்கலைந்த செம்மொழி மாநாட்டிலும் செண்டா மேளக் கச்சேரி இடம் பெற்றது செம் மொழி மாநாட்டுப் பாடலை இயக்கிய வரும் பாடியவர்களில் பெரும்பாலா னோரும் மலையாளிகளே. வந்தேறி களைத் தூக்கி வைத்துக் கொண்டாடு வதில் தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்பதைத் தெரிந்து கொண்ட கேரள அரசு செண்டா மேளத்திற்கென பள்ளி - கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் தொடங்கி இசைப்பயிற்சி முடித்தவர் களுக்கு சான்றளித்து, அவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.. முன்பெல்லாம் கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வந்து போனார்கள். தற்போது தமிழ்நாட்டி லேயே தங்கிவிட்டார்கள். இதனால் நமது பாரம்பரிய இசைக் கலைஞர்களின் வாழ்வில் இருள் சூழும்நிலை தோன்றியுள்ளது.

சூழல் கேடுகள் :
தமிழ்நாட்டிலிருந்து மலையாளி களுக்கு அரிசி, பருப்பு, பால், காய்கறி முதலான அத்தியாவசிய பொருட்களும், ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளும் செல்கின்றன. இதில் கோழியின் கழிவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் போன்ற திடக் கழிவுகளையும் மருந்துக் கழிவுகளையும் தமிழக எல்லையில் மலையாளிகள் கொட்டிச் செல்வது வழக்கமாகிவிட்டது. அவ்வப் போது உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரி விப்பது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தாலும் தடுக்க வேண்டிய தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க் கிறது. கோவை மாவட்டத்தில் கடலூர், பொள்ளாச்சி, நடுப்புணி, கிணத்துக்கடவு, வளந்தாயமரம், கோபாலபுரம், செமணாம் பதி, மூணாறு போன்ற இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கேரளக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
தமிழக எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இருந்தும், அதிகாரிகளின் மெத்தனத்தால் மலையாளிகள் தமிழகப் பகுதிகளில் கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள். கடந்த 09-07-2010 அன்று பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவைக் கொட்டவந்த கேரள லாரியைத் தடுத்து நிறுத்திய பெரியார் திராவிடர் கழக பொள்ளாச்சி வட்டச் செயலாளர் சா.சு. நாகராசன் கைது செய்யப்பட்டார். கைது செய்தது கேரள காவல்துறையோ என்று அவசரப்பட்டு விடாதீர்கள். நம் தமிழக காவல்துறைதான். பின்னே அண்டை மாநில உறவை வலுப்படுத்த வேண் டாமா? (இல்லாவிட்டால் சூரியா தொலைக்காட்சி கேரளத்தில் ஓடாது).

அரசியல் ஆதிக்கம் :
மத்திய அமைச்சரவையில் மக னுக்கும் பேரனுக்கும் வருமானம் வரும் துறையாக கேட்டுப் பெற்ற கலைஞ ரைவிடக் கேரளத்தவர்கள் வித்தியாச மானவர்கள். நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் ஏ.கே. அந்தோணி, வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் வயலார் ரவி, குடியேற்றத்துறை அமைச்சராக இருப்பவர் ஈ. அகமது எனத் தம் மாநில மக்களின் நலம் காக்கும் துறைகளைக் கேரளத்தவர்கள் பெற்றுள்ளார்கள். இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் தமிழர்கள்தான் அதிக நாடுகளில் பரவி வாழ்கிறார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள், வயலார் ரவி, அகமது போன்றோர் வகிக்கும் துறைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாததற்குக் காரணம் அந்தத் துறைகளில் அதிகம் சுருட்ட முடியாது என்பதுதான். ஆனால் மலையாளிகளின் கணக்கு வேறு. இந்தத் துறைகளின் மூலம் தமது இனத்திற்கு எந்தவகை யான பாதுகாப்பை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உத்திரவாதப்படுத்தலாம் பொருளாதாரத்தைப் பெருக்கலாம் என்று எண்ணிச் செயல்படுகிறார்கள்.
முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் குரூப்-1 தேர்வெழுதி தேர்ச்சி பெற்று தற்போது பணிபுரிபவர்கள் 57 பேர். இதில் மலையாளிகள் மட்டும் 37 பேர். இதுமட்டுமல்ல வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் நிரூபமா ராவ், பாதுகாப்பு ஆலோசகரான சிவங்கர் மேனன் மற்றும் எம்.கே.நாராயணன், பிரதமரின் ஆலோசகர் ஜோஷி, சோனியாவின் உச்சபட்ச ஆலோசகரான ஜார்ஜ், உள்துறைச் செயலாளர் கே.ஜி.பிள்ளை ஆகிய அனைவருமே மலையாளிகள் ஆவர். இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியாவிற்கான ஐ.நா. சிறப்புத் தூதுவராக கோபிநாத் அச்சங்குளங்கரே என்ற மலையாளியும், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் தனிச்செயலாளராக விஜய் நம்பியார் என்ற மலையாளியும் உள்ள னர். விஜய்நம்பியாரின் தம்பி மேஜர் ஜெனரல் சதீஷ் நம்பியார் இலங்கை ராணுவத்தினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருக்கிறார்.
நிர்வாகத்தின் கீழிருந்து மேல டுக்கு வரை எல்லாப் பொறுப்புகளிலும் மலையாளிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. உண்மையில் மத்தியில் நடப்பது மன்மோகன் - சோனியா ஆட்சி என்பதைவிட மலையாளிகளின் ஆட்சி என்பதுதான் பொருத்தமான தாகும். இவர்களின் சூழ்ச்சியால்தான் ஈழத்தில் நம் உறவுகள் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்திய அரசை ஆட்டிப்படைக்கும் அரசியல் சக்தியாக மலையாளிகள் திகழ்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் தமிழர்களின் நிலை :
தமிழ்நாட்டில் வசதி வாய்ப்பு களோடும், அரசியல் செல்வாக்கோடும் வாழும் மலையாளிகள் போல் கேரளத் தில் நம் தமிழர்கள் வாழ்கிறார்களா? கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை விட்டதுபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக திருவனந்தபுரம் நகரத்திற்கு மட்டும் ஒரு நாள் விடுப்பு கேட்டு கேரள அரசிடம் திருவனந்த புரத் தமிழர்கள் விண்ணப்பித்தார்கள். ஆனால் விடுமுறை கிடையாது என்று கேரள அரசு அறிவித்தது. இதைக் கண்டித்து அங்குள்ள தமிழர்கள் கேரளத் தலைமைச் செயலகத்தின் முன் பொங்கல் வைக்கும் போராட்டத்தினை நடத்தி சிறை சென்றார்கள்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒரு காலத்தில் கேரளாவில் பெரும் ஏலக்காய் எஸ்டேட் முதலாளி களாக இருந்தவர்கள். இவர்களின் கதை பெரும் துயரம் நிறைந்தது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியானாலும், கம்யூ னிஸ்ட் ஆட்சியானாலும் ஏலக்காய் எஸ் டேட்டிற்குச் சென்று ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மிரட்டி பணம் பறித்தார்கள். மலையாளி களுக்கு அதிகக்கூலி கொடுத்து கட்டுப் படியாகாததால் விவசாய வேலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களை அடித்து விரட்டினார்கள். பிறகு முழுக்க முழுக்க மலையாளிகளையே வேலைக் குச் சேர்க்க வேண்டும் என்று மிரட்டி னார்கள். இதனால் வந்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு மீண்டும் தமிழகத்திற்கே வந்து காலம் கழிக் கிறார்கள் நம் தமிழர்கள். மலையாளிகள் எந்த அளவிற்கு விழிப்புடனும் ஒரு கட்டுக்கோப்புடனும் திகழ்கிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாம் சின்னச் சின்ன எடுத்துக் காட்டுகள்தான். இதையெல்லாம் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்புப் போருக்காக வாவது தமிழர்கள் தயாராக வேண்டாமா?
அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்திலேயே காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புச் சட்டப்பிரிவான 370 கொண்டு வரப் பட்டது. அதன்படி காஷ்மீரில் பிறமா நிலங்களைச் சேர்ந்தவர்கள் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது. அவரவர் தாய்மொழி யில் வரவு செலவு கணக்கெழுதிக் கொள்ளலாம் என்ற சிறப்பு விதியும் வகுக்கப்பட்டது. இதன்படி இன்று தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் கடைகள் நடத்தி வரும் மார்வாடி, குஜராத்தி, மலையாளிகள் அவர்களின் தாய்மொழியிலேயே வரவு செலவுக் கணக்கு எழுதுவதால் நமது வருமான மற்றும் விற்பனை வரித்துறை அதிகாரி களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட வந் தேறிகள் விற்பனை வருமான வரித்துறை யினரை ஏமாற்றி வருகின்றனர். அல்லது லஞ்சம் கொடுத்து சரிக்கட்டுகின்றனர்.
இப்படி பிறமொழியினரின் பொருளாதார ஆதிக்கம் தமிழ் மண் ணில் வேர்பிடித்து நிற்பதை பிடுங்கி எறிய வேண்டுமானால் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறி சொத்து வாங்கியவர்களின் சொத்துக்கள் செல் லாது என்று சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் இந்த துணிச்சலான செயலைச் செய்ய முதுகெலும்புள்ள முதலமைச்சரால் மட்டுமே முடியும்.
1948-ல் செல்லாராம் என்ற மார்வாடி சென்னையில் துணிக்கடை திறந்ததை எதிர்த்து தந்தை பெரியார் ஆறுமாத காலம் தொடர்போராட்டம் நடத்தினார். ஒரு மார்வாடி உள்ளே வந் தால் பிறகு படிப்படியாக மார்வாடிகளின் ஆதிக்கம் பெருகிவிடும் என்று பெரி யார் அஞ்சினார். ஆனால் பெரியார் பெயரை மேடையில் முழங்கும் நமது முதலமைச்சர் தங்கச் சாலை என்ற தமிழ்ப்பெயரை மாற்றி மார்வாடியின் பெயரைச் சூட்டி செம்மொழியான நம் தமிழுக்கு இழுக்குத் தேடித்தந்தவர் களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிட்டார்.
களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று வரலாற்றில் படிக்கிறோம். ஆனால் கலைஞரின் காலம் இருண்ட காலமென நிகழ்காலத்தில் பார்க்கிறோம். நம் இனத்தைக் காட்டிக் கொடுப்பவர் கள் நம்மைக் காப்பாற்றப் போகிறார்களா என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
ஆசியாவில் சீனர்கள் வலிமை பெற்றுத் திகழ்வதைப் போல இந்தியா வில் இன்று வலுவுள்ள இனக்குழுவாக மலையாள இனம் திகழ்கிறது. மலையாளிகளின் ஆதிக்கப் போக்கு தொடருமேயானால் விரைவில் தமிழகம் கேரளமாகிவிடும். தமிழர்கள் பொருளாதார அடிமைகளாய் இடம் பெயரக்கூடிய அபாயம் ஏற்படும். அல்லது யூதர்களிடம் நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கும் அராபிய இனத்தைப் போல தமிழினம் தள்ளப்பட்டுவிடும். இந்த ஆபத்தை உணர்ந்து தமிழக அளவில் மலையாள ஆதிக்க எதிர்ப்பு இயக்கம் தொடங்கி தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் உடனடிக் கடமையாகும்.



நம் அரசியல்வா(வியா)திகள் ஏற்கனவே திருப்பதியை தாரை வார்த்தது போல் கோவையையோ நாகேர்கோவிலையோ தாரை வார்க்காமல் இருந்தால் 
சரி...........


லகுட பாண்டி