தலைப்பு முற்றிலும் உண்மை.
ஒசாமா - உலக தீவிரவாத வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர்.
ஏன், எங்கு,எப்படி போன்றவற்றை விட, காதோடு காதாக இவரின் கதையை முடிக்க ஒபாமா ஒப்புதல் அளித்ததற்கான காரணம் என்னவாக இருக்க கூடும்?
அமெரிக்காவின் செல்லபிள்ளையாக இருந்து பின்னர் அவர்களுக்கே சிம்ம சொப்பனமாக இருந்த ஒசாமா, நிச்சயமாக வரலாறில் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கபடுகிறார், படுவார்.
ஒசாமா பின்லேடன் - "லேடன் குரூப் ஆப் கம்பெனீஸ்" என்னும் சவுதியின் மிக பெரும் வியாபார குழுமத்தின் குடும்பத்தை சார்ந்தவர்.
பொருளாதாரம் பயின்றவர். கட்டுமான பொறியியல் பயின்றதாகவும் கூற்று உள்ளது. ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் ஆட்டத்தை அடக்க அமெரிக்கா என்னும் உலகத்தின் பேட்டை வஸ்தாதால் களமிறக்கப்பட்ட பலியாடு.
ஆம். பலியாடு என்றே நினைத்து அமெரிக்கா அவரை களமிறக்கியது. "முஜாஹிதீன்" என்ற அமைப்போடு தன்னை இணைத்து கொண்ட ஒசாமாவுக்கு முழுமையான பயிற்ச்சியும், ஆயதங்களும் தேவைக்கு அதிகமான பணத்தையும் கொடுத்தது அமெரிக்கா.
முஜாஹிதீன் அமைப்பு தான் ஆப்கனை விடுவிக்க வந்த சுதந்திர இயக்கம் என்று அமெரிக்கா பிரகடனம் செய்தது. சமய கோட்பாடுகள், ஆயுத பயிற்சி ஆகியவற்றோடு அமெரிக்காவின் மேதாவித்தனத்தையும் நன்றாகவே புரிந்து கொண்டார் போலும் ஒசாமா.
பாலஸ்தீன் பிரச்சினையில் அமெரிக்காவின் போக்கை கண்டித்து அவர்களுக்கு எதிராக திரும்பினார். பிறகு நடந்தது அனைத்தும் வரலாறு.
சில கவனிக்கபடவேண்டிய குறிப்புகள்.
ஒசாமா - எதிர்காலத்தில் அமெரிக்க எதிர்ப்புக்கு ஒரு உணர்வாக பயன்பட சாத்தியம் அதிகம்.
சோத்துக்கு வழி இல்லாமல் துப்பாக்கியை தூக்கவில்லை.
தான் இறங்கியிருக்கும் குழியில் நிச்சயம் தனக்கு நல்மரணம் அடையும் வாய்ப்பு இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்துதான் இருந்திருப்பார்.
உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கும் அதன் அதிபருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிகொண்டிருந்தாலும், உள்ளுக்குள் "மிரட்டுவதற்க்கு இருந்த ஒரு ஆளும் போயிட்டானே" என்ற எண்ணங்கள் எழுந்தே இருக்க வேண்டும்.
நேரு குடும்பத்துக்கு இருக்கும் சாபம் போல ஒசாமா குடும்பத்திலும் துர்மரணங்கள். இவர் தந்தையும், சகோதரரும் இரு வேறு விமான விபத்துகளில் இறந்தனர்.
உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்த சம்பவங்களை நிகழ்த்திய ஒசாமா ஒரு இடது கை பழக்கம் உடையவர் என்று எந்த பத்திரிக்கையும் கூடுதல் தகவலாக சொல்லாதது ஆச்சர்யம்.
- லகுட பாண்டி








