செவ்வாய், 3 மே, 2011

ஒசாமா - எய்தவனை நோக்கி திரும்பிய அம்பு

தலைப்பு முற்றிலும் உண்மை.

ஒசாமா - உலக தீவிரவாத வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர்.

ஏன், எங்கு,எப்படி போன்றவற்றை விட, காதோடு காதாக இவரின் கதையை முடிக்க ஒபாமா ஒப்புதல் அளித்ததற்கான காரணம் என்னவாக இருக்க கூடும்?

அமெரிக்காவின் செல்லபிள்ளையாக இருந்து பின்னர் அவர்களுக்கே சிம்ம சொப்பனமாக இருந்த ஒசாமா, நிச்சயமாக வரலாறில் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கபடுகிறார், படுவார்.

ஒசாமா பின்லேடன் - "லேடன் குரூப் ஆப் கம்பெனீஸ்" என்னும் சவுதியின் மிக பெரும் வியாபார குழுமத்தின் குடும்பத்தை சார்ந்தவர்.

பொருளாதாரம் பயின்றவர். கட்டுமான பொறியியல் பயின்றதாகவும் கூற்று உள்ளது. ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் ஆட்டத்தை அடக்க அமெரிக்கா என்னும் உலகத்தின் பேட்டை வஸ்தாதால் களமிறக்கப்பட்ட பலியாடு.

ஆம். பலியாடு என்றே நினைத்து அமெரிக்கா அவரை களமிறக்கியது. "முஜாஹிதீன்" என்ற அமைப்போடு தன்னை இணைத்து கொண்ட ஒசாமாவுக்கு முழுமையான பயிற்ச்சியும், ஆயதங்களும் தேவைக்கு அதிகமான பணத்தையும் கொடுத்தது அமெரிக்கா.

முஜாஹிதீன் அமைப்பு தான் ஆப்கனை விடுவிக்க வந்த சுதந்திர இயக்கம் என்று அமெரிக்கா பிரகடனம் செய்தது.  சமய கோட்பாடுகள், ஆயுத பயிற்சி ஆகியவற்றோடு அமெரிக்காவின் மேதாவித்தனத்தையும் நன்றாகவே புரிந்து கொண்டார் போலும் ஒசாமா. 

பாலஸ்தீன் பிரச்சினையில் அமெரிக்காவின் போக்கை கண்டித்து அவர்களுக்கு எதிராக திரும்பினார். பிறகு நடந்தது அனைத்தும் வரலாறு.

சில கவனிக்கபடவேண்டிய குறிப்புகள்.

ஒசாமா - எதிர்காலத்தில் அமெரிக்க எதிர்ப்புக்கு ஒரு உணர்வாக பயன்பட சாத்தியம் அதிகம்.

சோத்துக்கு வழி இல்லாமல் துப்பாக்கியை தூக்கவில்லை.

தான் இறங்கியிருக்கும் குழியில் நிச்சயம் தனக்கு நல்மரணம் அடையும் வாய்ப்பு இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்துதான் இருந்திருப்பார்.

உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கும் அதன் அதிபருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிகொண்டிருந்தாலும், உள்ளுக்குள் "மிரட்டுவதற்க்கு இருந்த ஒரு ஆளும் போயிட்டானே" என்ற எண்ணங்கள் எழுந்தே இருக்க வேண்டும்.

நேரு குடும்பத்துக்கு இருக்கும் சாபம் போல ஒசாமா குடும்பத்திலும் துர்மரணங்கள். இவர் தந்தையும், சகோதரரும் இரு வேறு விமான விபத்துகளில் இறந்தனர்.

உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்த சம்பவங்களை நிகழ்த்திய ஒசாமா ஒரு இடது கை பழக்கம் உடையவர் என்று எந்த பத்திரிக்கையும் கூடுதல் தகவலாக சொல்லாதது ஆச்சர்யம்.

- லகுட பாண்டி

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

உணர்வாய் தீ


வெட்கி தலைகுனிகிறேன் என்னை நினைத்து.

ஒரு தனி மனிதனின் உணர்ச்சிகள் "வெடித்ததன்" விளைவாய் ஒரு தேசத்தின் தலையெழுத்தே மாறுகிறது எகிப்தில்.

இங்கே முத்துகுமாரின் மரணத்துக்கு விடை தேட முடியாமல்

இன்னும் நான் மிஷ்கின் "எதை" களவாடிருப்பார் என்று தேடுகிறேன்.

தினம் ஒருவனாய் சாகும் என் மீனவனின் வாழ்வாதாரத்தை நிலைபடுத்த முடியாமல்

இன்னும் நான் என் ரசனையை ஆடுகளத்தின் "யாத்தே"வில் நிலைபடுத்தி லயிக்கிறேன்.

"யார் ஆட்சியில் எத்தனை மீனவர்கள் இறந்தார்கள்?" என்று கணக்கு சொல்லி மார்தட்டி கொள்ளும் பிணம்தின்னி கழுகுகளின் கொட்டத்தை அடக்க முடியாமல்

யார் யாரோடு கூட்டு சேர்வார் என்று என் தீர்க்கதரிசன திறமையை பரிசோதித்து கொள்கிறேன்.

கோடிகளாய் ஊழல்கள்.

அடுத்து யாரை கைது செய்வார்கள் என்று நகம் கடித்து பார்க்கிறேன் ஒரு திரைப்படத்தை பார்க்கும் ஆவலோடு.

வீதிக்கொரு சிலை திறக்கும் மாநிலம் என் தேசத்தில் இருக்கிறது

செருப்பு துடைத்து விட அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அதையும் சாதிமயமாக்க,பெண்ணியமாக்க என் நண்பர்கள் இருக்கிறார்கள்.

செத்த பிணத்தை கரைக்கு கொணர கடற்படை இருக்கிறது.

உயிர் இருந்தும் பிணமாய் அலையும் தலைவர்களை தட்டி கேட்க நான் படை அமைக்கவில்லை.

அடிப்படை வாழ்வுக்கு உயிரையும் மானத்தையும் விலைக்கு விற்கும் நிலைமை எனக்கு.

ஆயினும் விலை இல்லாமல் வாங்கிய வண்ணதொலைக்காட்சி உவகை அளிக்கிறது.

ஒரு முகமது தீ குளித்தான்..

அந்த தேசத்தின் தலைவன் பதவி இழக்கிறான்..

ஒரு முத்துகுமார் இறந்தான்..

உடலை சொந்தம் கொண்டாட உள்ளடி அரசியல் நடந்தது..

மல்லாந்து படுத்து காறி உமிழ்ந்து கொள்கிறேன்...

எப்பொழுது உணர்வேன்? அந்த நெருப்பின் சூட்டை..

சுயவிடுதலை செய்துகொண்ட எகிப்து மக்கள் உணர்ந்த அந்த தீக்குளிப்பின் சூட்டை..

எப்பொழுது உணர்வேன்? அந்த எழுச்சியை..

பினந்தின்னிகளிடமிருந்து விடுபட..

முடிவுறா கேள்விகள் மூளையை தின்ன...

விடை காண முயல்கிறேன் மானாட மயிலாடவில்.........

- லகுடபாண்டி

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

யுத்தம் செய்.....விமர்சனம் அல்ல


பொதுவாக சினிமா விமர்சனம் செய்வதில் பெரிய ஈடுபாடு இல்லை.

அதற்கு முக்கிய காரணம்: எப்பொழுதும் சினிமாவை சந்தர்ப்ப சூழ்நிலையின் தாக்கத்தோடு உணர்ச்சிகரமாய் அணுகியே பழக்கபட்டுவிட்டேன்.


அதனால் நடுநிலையான பார்வையோடு ஒரு படத்தை அணுகுவது அவ்வளவு சுலபமாக இல்லை. எனினும் கடந்த மூன்று வருடங்களாய் ஒரு நாளில் மூன்று வேலை உணவு இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக இரவு ஒரு படம் பார்ப்பது சர்வ நிச்சயமாகி போனது.


ஒரு சின்ன பிளாஷ்பேக்:

"போக்கிரி" - படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த சமயத்தில், வீட்டில் அனைவருக்கும் டிக்கெட் எடுத்து கொடுத்து படம் பார்க்க அனுப்பி வைத்தேன். படம் பார்த்துவிட்டு வந்த என் அப்பா என்னிடம்............




"காவல்காரன்" படத்தில் எம்ஜியார்,


"காக்கிசட்டை" படத்தில் கமல்ஹாசன்,


"பாண்டியன்" படத்தில் ரஜினி,


"போக்கிரியில்" விஜய்.

எத்தனை வாட்டி தான் இதே கதையை பாக்றது.

இந்த லட்சணத்துல தெலுங்கு ரிமேக்னு வேற சொல்லிகிறாங்க. "

என்று அலுத்து கொண்டார்.

அப்பொழுது நன்றாக உரைத்த விஷயம் கண்டிப்பாக ஏதாவது ஒரு "புத்தகம், திரைப்படத்தின்" பாதிப்பு இல்லாமல் புதியதாய் ஒரு படம் எடுப்பதற்கான சாத்தியம் குறைவு என்பது.

இதுவும் ஒரு காரணம் - பார்த்த சினிமாக்களை விமர்சிக்காமல் இருப்பதற்கு.

இதையெல்லாம் தாண்டி இந்த படத்தை பற்றி எழுத காரணம் மிஷ்கின்.


நிறைய பேர் அவரின் இந்த படத்தில் சிலாகித்து சொன்ன விஷயம், தரம் வாய்ந்த படைப்பை அளித்து அதில் தன் பெயரை எங்கேயும் சுட்டி கொள்ளாமல் இருக்கிறார் என்று.

இங்கே தான் தொக்கி நிற்கிறது கேள்வி?

யுத்தம் செய் :   





சந்தேகமே இல்லாமல் அனேக பதிவர்கள் விமர்சித்தது போல மிக சிறந்த மேக்கிங்.

எனினும், கதை பற்றி சொல்லியே ஆக வேண்டும். 


Memories of Murder, ஹாஸ்டல், சா மற்றும் ஈசன் படங்களை ஒட்டி இருப்பதாக சொல்லப்பட்டுவிட்டது.

யுத்தம் செய்யில் நான் பார்த்த படங்களின் பாதிப்புகள்:




8MM - நிக்கோலஸ் கேஜ் நடித்த படம். 8MM படத்தின் பாதிப்பு யுத்தம் செய் கதையில் முக்கிய கருவாய் கையாள(களவாட)பட்டிருப்பது போல் தெரிகிறது. 




அலிபாபா - கிருஷ்ணா நடித்தது . 


நந்தலாலா அனுபவத்திற்கு பின் மிஷ்கின் தன் பெயரை சாமர்த்தியமாக இதில் தவிர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒரு சில பழைய படங்களின் பாதிப்புகள் இல்லாமல் ஒரு புது படம் எடுப்பது மிகுந்த சிரமம் என்று என்னை போலவே மிஷ்கின்னும் நம்புகிறாரோ?



- லகுடபாண்டி


திங்கள், 17 ஜனவரி, 2011

"தமிழகத்தின் அடுத்த ஆட்சியில் முக்கியம்:யார் வர கூடாது என்பது தான்" தமிழருவி மணியன்

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் 


"என்ன செய்யலாம் இதற்காக?"   நூல் வெளியீட்டு விழா ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெற்றது. 


எழுத்தாளர் செயப்பிரகாசம்,  திரு.நெடுமாறன், திரு.தமிழருவி மணியன், இயக்குனர் திரு.மணிவண்ணன் , நடிகர்திரு. நாசர், நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன். சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் திரு.வேல் முருகன்,பேராசிரியை. செல்வி,  திரு.நிமல்கா பெர்ணான்டோ,  மற்றும் பலர் கலந்துகொண்டனர் .


இவ்விழாவில் பேசிய அனைத்து தலைவர்களும், ஈழ போரில் தமிழக திமுக ஆட்சி மற்றும் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் துரோகம் மற்றும் சிங்கள படையின் வெறித்தனம் பற்றி எடுத்துரைத்தனர்.


அவற்றின் காணொளி இங்கே காண கிடைக்கிறது
 http://www.youtube.com/user/pandri5000.


இவ்விழாவில் தமிழருவி மணியனின் பேச்சு மிக சுவாரசியமானது.


நாம் தமிழர் இயக்கம் இப்போது இலக்கை தீர்மானித்து விட்டது போலவே தெரிகிறது.



தமிழருவி மணியனின் பேச்சு அதை சரியாகவே பிரதிபலிக்கிறது.


தெள்ள தெளிவாக சொன்ன விஷயம்:


தமிழகத்தின் அடுத்த ஆட்சியில் யார் வர வேண்டும் என்பது முக்கியம் அல்ல. யார் வர கூடாது என்பது தான். 


இலக்கு:  திமுக, கருணாநிதி, காங்கிரஸ், சோனியா.

இதற்காக அவர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமைக்கு ஒரு நியாயமான கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
சில பல சீட்டுகளுக்காக திமுகவுடன் கூட்டு வைக்காதீர்கள் என்று.

அந்த காணொளி:


எப்போதும் உண்மை சுடும். 

அது போல மணியன் எடுத்துரைத்த சில உண்மைகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் சுடுமா என்று பார்க்க வேண்டும். 

எதிர்பார்ப்புடன் 

லகுட பாண்டி 

சனி, 8 ஜனவரி, 2011

இந்த விளம்பரங்கள் ஆணாதிக்கத்தை போதிக்கிறதா??????

நம்மால் முடிந்தது.....

ஒரு திரியை பற்ற வைக்கிறேன்......

 LAVA A 10



பழைய காலத்திலே ஒரு பொருளை வாங்கணும்னா, அதுக்கு நிறம், குணம், மணம் ஆகிய மூன்று ரோஜாக்களோட, விலை, பராமரிப்பு தேவைகள் உட்பட சில முட்களையும் அலசி ஆராய்ந்து வாங்கிய பழக்கம் கொண்டவர்கள் நாம்.

ஆனா இன்னிக்கு,

ஒரு மொபைல் வாங்கினா, அதனால கிடைக்க போறது என்னனு மேலே உள்ள விளம்பரம் சொல்லிருக்கும்.

கட்டிளம் காளைகள் இந்த மொபைல் வாங்கி இந்த மாதிரி சில பிகர்களோட நட்பையும்..பாசத்தையும்..இன்னும் என்னன்ன முடியமோ எல்லாத்தையும் பகிர்ந்துக்கங்கப்பா........

இனி ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு....

ஒரு சீரியஸ் கேள்வி..

இந்த விளம்பரம் பறைசாற்றும் கருத்து என்ன?

பத்த வைச்சாச்சு.... பிச்சுக்கறேன்............



ரகளையாய் கலாய்...

லகுட பாண்டி 

வியாழன், 30 டிசம்பர், 2010

சிறுத்தை, விக்ரமற்குடு, கமல், கருந்தேள், " நீஈஈஈஈஇ யப்பாஆஆஆஆ "

சமீபத்தில் (டிசம்பர் 2010 ல் தாங்க), தேளின் மன்மதன் அம்பு பற்றிய விமர்சனத்தையும், அதில் இருக்கும் கமல் பற்றிய கருத்துகளை பற்றியும் தான் இந்த பதிவு.


முதலில் சிறுத்தை ட்ரைலர்



அடுத்து விக்ரமற்குடு ட்ரைலர்



இதில் ரவிதேஜா போட்டிருக்கும் காக்கி சீருடைக்கும், கார்த்தி போட்டிருக்கும் காக்கி சீருடைக்கும் வித்தியாசம் உள்ளது, எனவே கதை என்னுடையது என்று "சிறுத்தை"யின் இயக்குனர் சிவா காப்பி ரைட்ஸ் வாங்காமல் சொல்லமுடியுமா?

அப்படி சொன்னால் விக்ரமற்குடுவின் கிளைமாக்சில்  " நீஈஈஈஈஇ யப்பாஆஆஆஆ " என்று சொல்லிகொண்டே ஒரு பெண் எட்டி உதைப்பதை போல விக்ரமற்குடுவின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி எட்டி உதைப்பார்.
அந்த மாதிரி எட்டி உதைக்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் தான் கமல்,மணிரத்னம், மிஷ்கின், அமீர் இத்யாதிகள் திருடுகிறார்களா?

இதில் கமலுக்கு நல்ரசனை பற்றிய வியாக்கியானம் வேறு.

கொஞ்சமும் கூச்சமில்லாமல் திருடும் இவர்களை என்ன சொல்வது?

நல்ரசனை:

"மக்களோட மனசுல" என்று ஆரம்பிக்கும் அந்த வசனம் ரொம்ப அருமை.

இப்போ நம்மளோட ரீமேக்:

" நூறு பேர் நம்ம பிளாக்கை படிக்கனும்னா, நூறு பதிவு போடணும்னு அவசியம் இல்லை"





"ஒரு பதிவு போட்டா போதும்"






"அந்த பேர்"






"அந்த மொக்கை"






"பாண்டி.......லகுட பாண்டி"



"அது போதும்"



டிஸ்கி:

தேளின் பெயரை இந்த பதிவின் தலைப்பில் போட்டதால் அவருக்கும் தனியாக இப்பதிவு மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது.

தேள், உங்களுக்கு விருப்பமில்லாவிடின் உடனடியாக நீக்கப்படும்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

வலி

மூளையில் உரைத்த போது,


சுருக்கென்று தைத்தது அந்த வலி.

"அவருக்கா"
 
 அவர் " அழகுராஜ் "


அவனுக்கு அவரை அதிகம் பிடிப்பதில்லை.

ஆனாலும் மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.

அவர் ஒன்னும் அப்படி ஒரு பெரிய எதிரி அல்ல.

உண்மையை சொல்வதானால் அவர் தான் அவனுக்கு ஆதர்சனம்.

பல விஷயங்களில். குறிப்பாய் தொழிலில்.

ஒரு அரசாங்க அதிகாரியாய் இருந்தும் அவர் மேஜையில், கிடப்பில் கோப்புகளை பார்த்ததாய் நினைவில் இல்லை. தன்னை தேடி வரும் எவரிடமும் அவர் "இல்லை" என்று சொன்னதே இல்லை.

எப்பொழுதும் அவரை சுற்றி ஒரு கும்பல் இருக்கும். இப்பொழுதும் இருக்க தான் செய்கிறது.

அவரை போலவே எல்லா விஷயங்களிலும் இருக்க முற்பட்டான் புகை பிடித்தலையும் சேர்த்து

பதின்ம வயதுகளில் முதலாவதாக தான் மனைவியாரின் மகன் அல்ல துணைவியாரின் மகன் என்று தெரிந்த போது மெல்ல அவரிடம் இருந்து விலகினான்.

அவர் மேல் மெல்ல ஒரு இனம் தெரியாத விரோதம் அவனுக்குள் வளர ஆரம்பித்தது. .

அவர் செய்த அதே தவறை, புகை பிடித்ததை அவர் கண்டித்த போது அவரை பார்த்து " நீ யோக்கியமா? " என்று உதடுகள் கேட்க துடித்து மௌனமானான்.

தன முதல் உத்தியோக்மாய் பம்பாய் போன போது

" நமசிவாயம் சொல்றத கேட்டு செய்." என்று தன் அண்ணனின் சொல்படி நடக்க சொன்ன போது வெறுப்பு கூடியது.

நமசிவாயம் - மனைவியாரின் மகன். சிறய அளவு வேற்றுமைகளும், மனஸ்தாபங்களும் அவர்களுக்குள் இருந்த சமயம். பம்பாய் அதை எல்லாம் சுத்தமாக துடைத்தெறிந்தது.

ஒற்றுமையான சகோதர்கள் ஆனார்கள். ஆயினும் அவரின் மீதிருந்த வெறுப்பு மட்டும் சற்றும் குறையவில்லை.

வீடு திரும்பி சொந்த தொழில் தொடங்கிய போது " என்னமோ செய் " என்று சொன்னார். வெறுப்பு விரோதம் ஆனது. அதே தொழில் ஊத்தி மூடி கொண்ட போது அவரின் மீது காட்டமான கோபம் இருந்தது.

பிழைப்புக்காக சிங்கை.


அன்று வார விடுமுறையின் சோம்பல் காலை தூக்கத்தில் அலைபேசி கதறியது.

மலேசியாவிலிருந்து நமசிவாயம் லைனில் பதறினான்.
முடிக்கமுடியாமல் தேம்பினான்.

" டேய் அப்பாவுக்கு ஹார்ட் அட்டகாம்" என்று.

மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.

 
" அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் "

 
இது ஒரு புனைவு அப்படின்னு ஓவரா பில்டப் எல்லாம் இல்லை.
 
திடீர்னு ஒரு கதை எழுதலாம்னு தோனுச்சு.


அதான்.

நட்புடன்


லகுட பாண்டி