படிக்கும் பொழுது கலவையான உணர்ச்சிகள் எழும்.
சந்தோசம், சலிப்பு, பயம், பரிதாபம்............................சில இறப்புகளில் உண்மையான வருத்தம் மேலிடும்.
எனக்கு அப்படி ஏற்பட்ட ஒரு உண்மையான வருத்தம் தான் முரளியின் இந்த மறைவு.
Simply he is an harmless actor.
இயக்குனர் சொல்வதை கேட்டு அதை அப்படியே நடிக்கும் நடிகர்.
புரட்சி நாயகன் என்று பட்டம் இவருக்கு மிக பொருத்தமான பட்டம் தான் என்பதற்கு இவர் நடித்த கீழ் கண்ட படங்களே சாட்சி:
பகல் நிலவு
பாலம்
புதிய காற்று
அதர்மம்
சத்யவான்
தேசிய கீதம்
இரணியன்
வெற்றி கொடி கட்டு
பொற்காலம்
அள்ளித்தந்த வானம்
கடல் பூக்கள்
பெரும்பாலான மக்களுக்கு முரளி என்றால் நினைவுக்கு வருவது அவர் கல்லூரி மாணவனாக நடித்த பாத்திரங்கள் மட்டுமே.
சில பேருக்கு அவர் மேடை பாடகராக தோன்றி நடித்த படங்கள். மோகனுக்கு பிறகு மைக் முரளி என்று செல்லமாக அழைக்க படும் அளவுக்கு மைக்கோடு படங்களில் தோன்றி நடித்தார்.
ஆனால் மேலே குறிப்பிட்ட படங்களில் முரளியின் நடிப்பு வேறு பரிமாணகளில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.
ஆக்ரோஷமான நாயகனாக நடிப்பதற்கு முரளி மிக பொருத்தமானவர் என்பது என் திடமான எண்ணம்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் முரளியை மேலே குறிப்பிட்ட படங்களில் தான் மக்களுக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும்.
அனாவசிய கிசுகிசுக்கள் இல்லாமல், அமைதியாக பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.
கல்லூரி மாணவனாக 47 வயது வரை நடித்தவர். தன் மகனுடன் கல்லூரி மாணவனாக நடித்த ஒரே நடிகராகவும் இருக்க கூடும்.
அவ்வாறு நடித்தாலும், அதை தன் நடிப்பாற்றலால் மக்களை ஏற்க வைத்தவர்.
மிக நல்ல அந்த கலைஞனின் ஆத்மா அமைதி கொள்ள வேண்டுவோம்.
டிஸ்கி:
பல பதிவர்களாலும், பத்திரிகைகளாலும் கிண்டல் செய்யப்பட்ட கடவுள் முரளி என்று ஒவ்வொரு தீபாவளிக்கும் போஸ்டர் அடிக்கும் இந்த ரசிகர் திரு. கே.கே. பெருமாள், ஏனோ நினைவுக்கு வந்து சென்றார்.
வருத்தத்துடன்
லகுட பாண்டி
.jpg)
.jpg)
.jpg)

.jpg)



.jpg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக