செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

யுத்தம் செய்.....விமர்சனம் அல்ல


பொதுவாக சினிமா விமர்சனம் செய்வதில் பெரிய ஈடுபாடு இல்லை.

அதற்கு முக்கிய காரணம்: எப்பொழுதும் சினிமாவை சந்தர்ப்ப சூழ்நிலையின் தாக்கத்தோடு உணர்ச்சிகரமாய் அணுகியே பழக்கபட்டுவிட்டேன்.


அதனால் நடுநிலையான பார்வையோடு ஒரு படத்தை அணுகுவது அவ்வளவு சுலபமாக இல்லை. எனினும் கடந்த மூன்று வருடங்களாய் ஒரு நாளில் மூன்று வேலை உணவு இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக இரவு ஒரு படம் பார்ப்பது சர்வ நிச்சயமாகி போனது.


ஒரு சின்ன பிளாஷ்பேக்:

"போக்கிரி" - படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த சமயத்தில், வீட்டில் அனைவருக்கும் டிக்கெட் எடுத்து கொடுத்து படம் பார்க்க அனுப்பி வைத்தேன். படம் பார்த்துவிட்டு வந்த என் அப்பா என்னிடம்............




"காவல்காரன்" படத்தில் எம்ஜியார்,


"காக்கிசட்டை" படத்தில் கமல்ஹாசன்,


"பாண்டியன்" படத்தில் ரஜினி,


"போக்கிரியில்" விஜய்.

எத்தனை வாட்டி தான் இதே கதையை பாக்றது.

இந்த லட்சணத்துல தெலுங்கு ரிமேக்னு வேற சொல்லிகிறாங்க. "

என்று அலுத்து கொண்டார்.

அப்பொழுது நன்றாக உரைத்த விஷயம் கண்டிப்பாக ஏதாவது ஒரு "புத்தகம், திரைப்படத்தின்" பாதிப்பு இல்லாமல் புதியதாய் ஒரு படம் எடுப்பதற்கான சாத்தியம் குறைவு என்பது.

இதுவும் ஒரு காரணம் - பார்த்த சினிமாக்களை விமர்சிக்காமல் இருப்பதற்கு.

இதையெல்லாம் தாண்டி இந்த படத்தை பற்றி எழுத காரணம் மிஷ்கின்.


நிறைய பேர் அவரின் இந்த படத்தில் சிலாகித்து சொன்ன விஷயம், தரம் வாய்ந்த படைப்பை அளித்து அதில் தன் பெயரை எங்கேயும் சுட்டி கொள்ளாமல் இருக்கிறார் என்று.

இங்கே தான் தொக்கி நிற்கிறது கேள்வி?

யுத்தம் செய் :   





சந்தேகமே இல்லாமல் அனேக பதிவர்கள் விமர்சித்தது போல மிக சிறந்த மேக்கிங்.

எனினும், கதை பற்றி சொல்லியே ஆக வேண்டும். 


Memories of Murder, ஹாஸ்டல், சா மற்றும் ஈசன் படங்களை ஒட்டி இருப்பதாக சொல்லப்பட்டுவிட்டது.

யுத்தம் செய்யில் நான் பார்த்த படங்களின் பாதிப்புகள்:




8MM - நிக்கோலஸ் கேஜ் நடித்த படம். 8MM படத்தின் பாதிப்பு யுத்தம் செய் கதையில் முக்கிய கருவாய் கையாள(களவாட)பட்டிருப்பது போல் தெரிகிறது. 




அலிபாபா - கிருஷ்ணா நடித்தது . 


நந்தலாலா அனுபவத்திற்கு பின் மிஷ்கின் தன் பெயரை சாமர்த்தியமாக இதில் தவிர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒரு சில பழைய படங்களின் பாதிப்புகள் இல்லாமல் ஒரு புது படம் எடுப்பது மிகுந்த சிரமம் என்று என்னை போலவே மிஷ்கின்னும் நம்புகிறாரோ?



- லகுடபாண்டி


1 கருத்து:

  1. நேர்மறை.எதிர்மறை எல்லா மறை விமர்சனங்கள்,

    "ஏதாவது" வந்தால் வரவேற்க்கபடுகின்றன.

    பதிலளிநீக்கு