சமீபத்தில் (டிசம்பர் 2010 ல் தாங்க), தேளின் மன்மதன் அம்பு பற்றிய விமர்சனத்தையும், அதில் இருக்கும் கமல் பற்றிய கருத்துகளை பற்றியும் தான் இந்த பதிவு.
முதலில் சிறுத்தை ட்ரைலர்
அடுத்து விக்ரமற்குடு ட்ரைலர்
இதில் ரவிதேஜா போட்டிருக்கும் காக்கி சீருடைக்கும், கார்த்தி போட்டிருக்கும் காக்கி சீருடைக்கும் வித்தியாசம் உள்ளது, எனவே கதை என்னுடையது என்று "சிறுத்தை"யின் இயக்குனர் சிவா காப்பி ரைட்ஸ் வாங்காமல் சொல்லமுடியுமா?
அப்படி சொன்னால் விக்ரமற்குடுவின் கிளைமாக்சில் " நீஈஈஈஈஇ யப்பாஆஆஆஆ " என்று சொல்லிகொண்டே ஒரு பெண் எட்டி உதைப்பதை போல விக்ரமற்குடுவின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி எட்டி உதைப்பார்.
அந்த மாதிரி எட்டி உதைக்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் தான் கமல்,மணிரத்னம், மிஷ்கின், அமீர் இத்யாதிகள் திருடுகிறார்களா?
இதில் கமலுக்கு நல்ரசனை பற்றிய வியாக்கியானம் வேறு.
கொஞ்சமும் கூச்சமில்லாமல் திருடும் இவர்களை என்ன சொல்வது?
நல்ரசனை:
"மக்களோட மனசுல" என்று ஆரம்பிக்கும் அந்த வசனம் ரொம்ப அருமை.
இப்போ நம்மளோட ரீமேக்:
" நூறு பேர் நம்ம பிளாக்கை படிக்கனும்னா, நூறு பதிவு போடணும்னு அவசியம் இல்லை"
"ஒரு பதிவு போட்டா போதும்"
"அந்த பேர்"
"அந்த மொக்கை"
"பாண்டி.......லகுட பாண்டி"
"அது போதும்"
டிஸ்கி:
தேளின் பெயரை இந்த பதிவின் தலைப்பில் போட்டதால் அவருக்கும் தனியாக இப்பதிவு மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது.
தேள், உங்களுக்கு விருப்பமில்லாவிடின் உடனடியாக நீக்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக