ஓடு மீன் ஓட உரு மீனுக்கா காத்திருக்கும் கொக்கை போல,
ஒரு தவம்.
நலம் விரும்பியின் பேச்சுக்கு மதிப்பளித்து காத்த
ஒரு வருடம் தவத்தை இன்றோடு கலைக்கிறேன்.
(என்ன மேட்டரா!!!!!!!!!!!!!!!!!!!
அது ஆச்சி.ஒரு வருஷம். இன்னையோட கடைய தொறந்து.)
ஆனா நம்பினா நம்புங்க...........பிற்காலத்துல நானும் பிரபல பதிவரா வருவேன்......அப்போ இதையெல்லாம் படிக்க வேண்டிய நிலைமை உங்களுக்கு வரும். அதனால இப்பவே சொல்லிடறேன்.
எதாவது புதுசா கேள்விபட்டா அதை அனுபவித்து பார்க்க துடிப்புடன் இருப்பவன் நான். அந்த வேகத்தில தான் இந்த பதிவு பக்கத்தை ஆரம்பிச்சேன்.
ஆனா அப்ப கமல் ( நம்ம மாமு, மச்சான், சிநேகிதன், சித்தப்பன், பெரியப்பன், நண்பன் எல்லாம் அவன்தான் ) எனக்கு தந்த அறிவுரை பொறுமையாயிரு.
ஒரு ஆறு மாசம் - ஒரு வருஷம் எல்லா பதிவுகளையும் படி. தலைப்பு, நடை எல்லாத்தையும் கவனி. ஓரளவுக்கு தமிழ் நல்ல நடையோடு எழுத பழகு, அப்புறம் வா.
பொறுமையாய் இருந்தேன். கவனித்தேன். இனி எழுதுவேன்.
கண்டிப்பாக பல்சுவை விஷயங்கள் இருப்பதற்கு முயற்சி செய்வேன்.
(என்னப்பா எதோ IPS ஆபிசர் மாதிரி உறுதி மொழி எல்லாம் எடுக்கிரானு கமல் சொல்லறது உங்க காதுல விழாம இருக்க நந்திய வேண்டிகிறேன்)
ரகளையாய் களாய்
பாண்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக