1. தமிழ் நாட்டில் குழந்தைகள் பிச்சை எடுப்பதை பார்த்தால், தயவு செய்து கீழ கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்:
"RED SOCIETY"
9940217816.
இவர்கள் நிச்சயமாக உதவுவார்கள் என்கின்றனர் நண்பர்கள் நம்பிக்கையுடன்
2. எல்லா வகை ரத்தங்கள் மற்றும் தானம் செய்யும் விருப்பம் உள்ளவர்களின் முகவரிகளை தெரிந்து கொள்ள:
www.friendstosupport.org
கொடையாளர்களின் முகவரிகளோடு அவர்களின் அலைபேசி எண்ணும் கிடைப்பது சிறப்பு.
3. பொறியியல் படிக்கும் மாணவர்கள் கீழ காணும் தளத்தில் பதிந்தால், இவர்களின் வேலை விண்ணப்பங்கள் 40 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பபடுகிறது.
www.campuscouncil.com
4.ஊனமுற்ற குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்களுக்கு
9842062501 & 9894067506
எண்களை தொடர்பு கொள்ளவும்
5. தவறுதலாக தொலைக்க பட்ட டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு புத்தகம் போன்ற முக்கிய ஆவணங்கள் உங்களிடம் கிடைக்க பெற்றால் தயவு செய்து அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் போட்டு விடவும்.
அது தானாக உரியவரிடம் சென்று சேர்ந்தடையும். உரியவர் தகுந்த fine கட்டி பெற்று கொள்வர்.
அஞ்சல் துறை இந்த சேவையை இது வரை குறை இல்லாமல் செய்து வருகிறது. உங்கள் தபால்காரரிடம் எதுவும் பிரச்சினை இல்லாமல் இருந்தால்.
6. அடுத்த 10 மாதங்களில் பூமியின் வெப்பநிலை மேலும் 4 டிகிரி கூடிவிடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என உலக வெப்ப நிலை ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர்.
தடுக்க முடியாது என்றாலும் தாக்கத்தை குறைக்க கீழ காணும் விஷயங்களை கையாள்வது அவசியமாகிறது:
குப்பைகளை எரிக்காதிர்கள்.
நீர் மற்றும் மின்சாரத்தை வீணாக்காதீர்கள்.
நிறைய மரங்கள் நடுங்கள்.
7. உலகத்தின் மொத்த மக்கள் தொகைக்கும் ஆறு மாதங்களுக்கு உயிர்வாயுவான ஆக்சிஜன் தயார் செய்ய 38 ட்ரில்லியன் டாலர்கள் செலவு செய்ய வேண்டும் என்று கண்டுபிடிக்க பட்டுள்ளது.
மரங்கள் அதை இலவசமாக செய்கின்றன.
நிறைய மரங்கள் நடுவோம், அவைகளை சீராக பராமரிப்போம்.
அதற்காக பசுமை தாயகத்தில் சேர வேண்டியதில்லை என்று கமல் சொல்றான்.
வாயிலேயே போட்டேன். "அரசியல் பேசாதடா" ன்னா கேக்கறதில்லை .
8. குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்துக்கொள்ள தயவு செய்து கீழ கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்:
Sri Valli Baba Institute Banglore. 9916737471
9. உணவு பொருட்களை வீணாக்காதிர்கள்.
உங்கள் வீட்டு சுபகாரியங்களில் மீறும் உணவு பொருட்களை வீணாக்காமல் 1098 என்னும் எண்ணுக்கு தகவல் தெரிவியுங்கள். இது குழந்தைகளுக்கான சேவை மையத்தின் எண். அவர்கள் வந்து சேகரித்து செல்வர்.
இப்போ தான் முக்கியமான விஷயம்:
இதெல்லாம் எங்களுக்கு முன்னாடியே தெரியும். எங்களுக்கு மெயில்ல வந்த தகவல் இது.
இதையெல்லாம் பதிவா எழுதறான் பாருன்னு சிரிக்கிறவர்களுக்கு மேற்கண்ட விஷயங்களை எத்தனை முறை நீங்கள் பிறருக்காக செய்து இருக்கிறீர்கள்.
மனசாட்சியை பார்த்து பதில் சொல்லி கொள்ளுங்கள்.
உதவி புரிவோம். உள்ளம் குளிர்விப்போம்.
உள்ளம் குளிர்வோம்.
ரகளையாய்
லகுட பாண்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக